
மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவசர இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் +94 71 980 2822 என்ற வட்ஸ்அப் மற்றும் துரித தொலைபேசி இலக்கமான 1989 என்ற இலக்கங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை அணுக முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வெளிநாடுகளில் பணியாற்றும் தங்களது உறவினர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள இயலாதவர்கள் குறித்த இலக்கங்களை தொடர்பு கொண்டு அவர்கள் தொடர்பான விபரங்களை அறியமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
