யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சிசுவின் கருச் சிதைவு!

யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து சற்றுமுன் சிசு ஒன்றின் கருச்சிதைவு மீட்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் குறித்த கருச் சிதைவு காணப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் குறித்த இடத்தை ஆய்வு செய்ததுடன், கருச்சிதைவினை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.