சந்திர கிரகணம் நிகழ்வதை இலங்கை  மக்கள் காண வாய்ப்பு

மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை அன்று சந்திர கிரகணம் நிகழ்வதை இலங்கை  மக்கள் காண வாய்ப்புள்ளதாக ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது முழு சந்திர கிரகணமாக வகைப்படுத்தப்பட்டாலும், இலங்கையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பகுதியளவு சந்திர கிரகணமாகவே (Partial Lunar Eclipse) தோன்றும்.

இதற்குக் காரணம், முழு கிரகணத்தின் போது சந்திரன் இலங்கையின் அடிவானத்திற்கு கீழே இருக்கும்.

எனவே, சந்திரன் பூமியின் நிழலால் முழுமையாக மறைக்கப்படும் நிகழ்வை இலங்கையிலிருந்து பார்க்க முடியாது. மாலை 6:21 மணிக்கு சந்திரன் கிழக்கு அடிவானத்திற்கு மேலே வரும்போது, அதன் ஒரு பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டிருப்பதை மக்கள் காண முடியும்.

இந்தக் கிரகணத்தை மிகச் சிறப்பாகக் காண, கிழக்கு அடிவானம் தெளிவாகத் தெரியும், மேகங்கள் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.