மட்டக்களப்பின் 4 பொலிஸ் பிரிவுகளில் 6 கசிப்பு வியாபாரிகள் 405 லீற்றர் கசிப்புடன் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்தில்-வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, கல்குடா பொலிஸ் நிலைய பிரிவுகளில், கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேரை, 405 லீற்றர் கசிப்புடன், நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களையடுத்து, வவுணதீவு பொலிஸார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை, 365 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.
அதேவேளை, வாழைச்சேனை பொலிஸார் 5 லீற்றர் கசிப்புடன் இருவரை கைது செய்தனர்.
அவ்வாறே, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை, 30 லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன், கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 5 லீற்றர் கசிப்புடன் ஒருவரை கைது செய்தனர்
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
