கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் COLOURS AWARD நிகழ்ச்சி

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய 2026 ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதன்போது நீல நிறத்தை உடைய ஜன்னத் இல்லத்திற்கான உத்தியோகபூர்வ மேலங்கி, இல்லக்கொடி அறிமுகத்துடன் இல்லக் கீதம் வெளியீட்டு வைக்கும் நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஜன்னத் இல்லத் தலைவர் எம்.வை.எம்.யூசுப் இம்ரான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைஸால்,கௌரவ அதிதிகளாக பிரதி அதிபர் இ.றினோஸ் ஹஜ் மின் உதவி அதிபர்களான யு.எல் ஹிதாயா, நஸ்மியா புகாரி ஆகியோரும் விசேடஅதிதிகளாக இல்ல விளையாட்டுப் போட்டியின் செயலாளர் யு.எல்.சிபான்,நுஸ்ரத் இல்லத் தலைவர் ஏ.ஆர்.எம் ஹிம்சாத், மின்னத் இல்லத் தலைவர் ஏ.எம் பஸ்மீர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.ஏ.எம் றியால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது COLOURS AWARD எனும் தொனிப்பொருளில் ஆரம்பமானதுடன் பெரு விளையாட்டுக்கள், மைதான விளையாட்டுக்கள், உட்பட சிறுவர் சுவட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜன்னத் இல்லத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெரு விளையாட்டுக்களில் ஒன்றான ஆண்களுக்கான கிரிக்கெட், பெண்களுக்கான கிரிக்கெட் மற்றும் பெண்களுக்கான எல்லே விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் மாணவர்கள் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

இது தவிர சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் தரம் 4 ஆண் மாணவர்கள் சம்பியன் கிண்ணத்தை பெற்றமை ஜன்னத் இல்லத்திற்கு பெருமை சேர்த்தது.

குறித்த நிகழ்வில் பெரு விளையாட்டுக்களில் அதீத திறமைகளை வெளிக்காட்டிய 8 மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாடசாலைகளுக்கிடையிலான இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கு மத்தியில் ஒரு இல்லமானது தனக்கான தனித்துவ கீதம் ஒன்றினை வடிவமைத்துள்ளமை வரலாற்றில் முதல் தடவையாகும்