மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானை ஒன்று, திடீரென மக்கள் மனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளது.
அதிகாலை வேளையில் புகுந்த யானை, வீட்டில் தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த பெண்களை தாக்கியது, யானை தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சிவபாக்கியம் (வயது 74 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் யானைகளின் அட்டகாசம் முடிவின்றி தொடர்கிறது,


