இலங்கையில் இன்று தங்கத்தின் விலை?
உலக சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
இலங்கையிலும் கடந்த வாரம் ஒரு பவுண் 24 கரட் தங்கம் 396,000 ரூபாயாகக் காணப்பட்டது.
எனினும், நேற்று முன்தினம் அதன் விலையில் 4,000 ரூபாய் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த உயர்வடைந்த விலையிலேயே தங்கம் தற்போதும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
