“ஒரே விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்து விட்டு, வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்க முடியாது” – குமார் சங்ககாரா

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்து, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரா கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பின்னடைவுகளுக்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இருவரும் அனுபவித்த வலியை அவர் சுட்டிக்காட்டினார்.

“எல்லா இடங்களிலும் நிறைய வேதனைகள் உள்ளன, ரசிகர்கள் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர், ஏமாற்றமடைந்துள்ளனர், கோபமாக உள்ளனர், வீரர்களும் மோசமாக வேதனைப்படுகிறார்கள், நானும் இதேபோன்ற டிரஸ்ஸிங் அறைகளில் இருந்திருக்கிறேன், இது எளிதானது அல்ல” என்று சங்ககாரா குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் நாட்டையும் உங்கள் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் ஒரு பாக்கியம்” என்று சங்ககார தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“வேகமாக வளர்ந்து வரும் கிரிக்கெட் உலகிற்கு ஏற்ப இலங்கை மாற வேண்டும்” என்று சங்ககாரா எச்சரித்தார், “அதே அணுகுமுறைகளை மீண்டும் மீண்டும் செய்வது, வெவ்வேறு முடிவுகளைத் தராது” என்று வலியுறுத்தினார்.

“நம்மைச் சுற்றியுள்ள கிரிக்கெட் உலகம் மிக விரைவாக வளர்ச்சியடைந்துள்ளபோது, ​​நாம் ஒரே விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்து விட்டு, வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.