அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு குறைந்தபட்சம் 16,730 ரூபாய் தேவை!
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான வாழ்க்கைச்செலவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
இதில் ஒரு தனிநபருக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மாதத்திற்கு குறைந்தபட்சம் 16,730 ரூபாய் தேவைப்படுகிறது.
தரவுகளின்படி, அடிப்படை மாதாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகபட்ச செலவு, கொழும்பு மாவட்டத்தில் 18,044 ரூபா ஆகவும், மிகக் குறைந்த செலவு மொனராகலை மாவட்டத்தில் 15,997 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.
வாழ்க்கைச்செலவு என்பது அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஒரு நபருக்குத் தேவையான குறைந்தபட்ச செலவினத்தைக் குறிக்கிறது
மேலும் இது பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் மாதந்தோறும் திருத்தப்படுகிறது.

