சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மற்றுமொரு கார் விபத்து!
-மஸ்கெலியா நிருபர்-
அளுத்கம பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த கார் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு நல்லதண்ணி பொலிஸ் பகுதியில் இடம் பெற்றுள்ளது என, நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
காரின் சாரதிக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த மூவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
