
வவுனியாவில் பெண்ணொருவரால் மற்றுமொரு பெண் மீது கத்திக்குத்து!
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள சிறப்பு அங்காடிக்குள் பெண்ணொருவரை, மற்றுமொரு பெண் ஒருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 50 வயதான பெண்னொருவரெ கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
