யாழ்.இளவாலையில் உரப் பையில் காணப்பட்ட மோட்டார் குண்டு!

-யாழ் நிருபர்-

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளானை பகுதியில் இன்று திங்கட்கிழமை மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை பெற்றபின் குறித்த மோட்டார் குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.