ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கிராண்ட்பாஸ், மாதுரகே மாவத்தை பகுதியில் 510 கிராம் 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அங்கோடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.