சிவனொளிபாதமலைக்கு சென்றவர் திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு!
-மஸ்கெலியா நிருபர்-
சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற, 81 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இடம் பெற்றதாக, நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இன்று காலை, குறித்த முதியவர் தனது குடும்பத்தினருடன், சிவனொளிபாதமலைக்கு சென்று கொண்டிருந்த வேளை திடீரென கடும் சுகவீனமுற்றார்.
அவர், மலை உச்சியில் இருந்து கடும் சிரமத்தின் மத்தியில் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு இருந்து அவசர அம்பூலன்ஸ் மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
