ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பம்

ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது.

அதன்படி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7:00 மணிக்கு ஆரம்பமாகும்.

இதே நேரத்தில், இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு கண்டியில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.