சுவீட்சலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான துணை தூதுவர் வெருகல் விஜயம்
-மூதூர் நிருபர்-
சுவீட்சலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான துணை தூதுவர் Olivier praz திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதே செயலகத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்தார்.
இதன்போது தித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு சுவீஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி உதவியை பெற்ற பயனாளிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
இதில் வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் கலந்து கொண்டார்.
கடந்த தித்வா புயலினால் பாதித்கப்பட்ட வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சுமார் 500 பயனாளிகளுக்கு சுவீஸ் அரசாங்கத்தினால் தலா 27000 ரூபாய் பணம் வைப்பிலடப்பட்டிருந்தது.
சுவீஸ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வெருகல் பிரதேச செயலகம் ஊடாக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே இப் பணம் வைப்பிலடப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைப்பிலடப்பட்ட பணத்தை பயனாளர்கள் பிரயோசனமா பயன்படுத்தியுள்ளார்களாக என்பதை அறிந்து கொள்வதற்காக துணைத் தூதுவரின் இவ் விஜயம் அமைந்திருந்தது.
இதன்போது பயனாளர்கள் உதவி செய்தமைக்கு நன்றிகளை தெரிவித்ததோடு தமது கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



