தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

 

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டமையினாலேயே அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை, இந்தச் சதி முயற்சியுடன் தொடர்புடைய அவரது நிர்வாகத்தின் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தண்டனைகளை அறிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன்க்கு (Kim Yong-hyun) 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தளபதி ரோ சாங்-வோனுக்கு (Roh Sang-won) 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சோ ஜி-ஹோவுக்கு (Cho Ji-ho) 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சியோல் பெருநகர பொலிஸ் பிரிவின் தலைவர் கிம் பொங்-சிக்குக்கு (Kim Bong-sik) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய சபையின் பொலிஸ் பாதுகாப்புக் பிரிவின் முன்னாள் தலைவர் மொக் ஹியூன்-டேவுக்கு (Mok Hyun-tae) 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு வார காலத்திற்குள் மேன்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.