இலங்கை – சிம்பாப்வே போட்டியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஆர். பிரேமதாச மைதானத்தை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த 600 அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
