
அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் பொது மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்
-அம்பாறை நிருபர்-
எதிர்வரும் ஓரு சில தினங்களில் முஸ்லீம்களுடைய புனித றமழான் மாதம் ஆரம்பிக்கின்றது.
இந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, போலியான, கலப்படம் செய்யப்பட்ட, தரம் குறைந்த,காலாவதியான, பாவனையாளர் பாவனைக்கு உகந்ததற்ற உணவுப் பொருட்களை வியாபார நிலையங்களில் அல்லது சந்தையில் விற்பனையில் இருப்பது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மேலே குறிப்பிட்ட மோசடிகள் இடம் பெறும் போது அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினை தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மாவட்ட பொறுப்பதிகாரி முறைப்பாட்டு இலக்கம் – 063-2222355
துரித தொடர்பு இலக்கம் – 1977
