சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில், இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் நேற்று 5,000 டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 4,924 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதற்கமைய, நேற்று ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 73.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
