மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த கராத்தே மாணவர்கள்
ஷோட்டோகன் கராத்தே டோ கூட்டமைப்பின் (SHOTOKAN KARATE DO FEDERATION SRILANKA) ஏற்பாட்டில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் கொழும்பு செண்.ஜோசப் கல்லூரி உட்புற மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 13 வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருபாலருக்குமான போட்டியில் ஜப்பான் ஷோடோகன் கல்வி சங்கம் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 11 மாணவர்கள் பங்குபற்றி சிறப்பாக விளையாடினார்கள்.
இந்த போட்டியில் வஜீதரன் யோஷன் குமிட்டி ( Kumite) போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும் இராஜேஸ்வரன் லிதுர்ஷன் மற்றும் சதானந்தகுமார் , நோயல் றினோஷன் ஆகிய இருவரும் குமிட்டி ( Kumite) போட்டியில் வெவ்வேறு பிரிவுகளில் வெண்கலப்பதக்கங்களையும் பெற்று தமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை ஜேகேஎஸ்எஸ்ஏ (JKSSA) இன் பிரதம போதனாசிரியர் ஷிஹான். எச்.எம்.விஜயகுமார் சென்செய் (Sensei) எம் .நாகராஜா மற்றும் சென்செய்(Sensei) ரி.சதானந்தகுமார் ஆகியோரும் பயிற்றுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


