போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர்

பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கடந்த 08ஆம் திகதி பத்தரமுல்லை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 32 வயது சந்தேகநபர், பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அதற்கமைய, சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, பம்பலப்பிட்டிய, நாரஹேன்பிட்டி, பேலியகொட, தெமட்டகொட, தலங்கம, கொத்தட்டுவ, மருதானை, குருந்துவத்த, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பகுதிகளில் 08 மோட்டார் சைக்கிள் திருட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்களை திருடியதாகத் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற சொத்துக்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று சனிக்கிழமை (14) அளுத்கமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.