ஹட்டன் – நுவரெலியா வீதியில் முச்சக்கர வண்டிகள் மோதல்
-மஸ்கெலியா நிருபர்-
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென் கிளையார் நீர்வீழ்ச்சிக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சென் கிளெயார் நீர்வீழ்ச்சிக்கு அருகில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின.
பலத்த காயமடைந்த ஒரு சாரதி 1990 சுவசரிய ஆம்புலன்ஸ் மூலம் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
