சுவிட்சர்லாந்தில் பாரிய பனிச்சரிவு மறுஅறிவித்தல் வரை சாலை மூடப்பட்டுள்ளது
-ச.சந்திரபிரகாஷ்-
சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தின் – ரோட்லோய்வி சுரங்கப்பாதை பகுதியில் கோபன்ஸ்டீன் மற்றும் கம்பலுக்கு இடையேயான ஏ6 மோட்டார் பாதையில் பாரிய பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதிக பனிச்சரிவு ஆபத்து காரணமாக, மறு அறிவித்தல் வரை இப்பகுதிக்கான சாலை போக்குவரத்துக்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்பு கோபன்ஸ்டீன் மற்றும் கம்பல் இடையேயான ஏ6 மோட்டார் பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த பனிச்சரிவு காரணமாக , கோபன்ஸ்டீன் ரோட்லோய்வி சுரங்கப்பாதையின் நுழைவாயில் பகுதி முற்றாக புதைத்ததுள்ளது.
பனிச்சரிவை சாலை உடனடியாக மூடப்பட்டது, மேலும் லோட்ச்பெர்க் புகையிரத கார் சேவை உடனடியாக மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் சுரங்கப்பாதையின் எந்தவொரு உள்கட்டமைப்பும் சேதமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் அளவில் சாலையில் இருந்த பனிப்பாறைகள் முற்றாக அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிக பனிச்சரிவு ஆபத்து இருப்பதால் கோபன்ஸ்டீன் மற்றும் கம்பல் இடையேயான சாலை தற்போதைக்கு மூடப்பட்டிருக்கும்.
மத்திய சாலைகள் அலுவலகம் வானிலை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

