அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்கு மறுதவணைக்கு திகதியிடப்பட்டது!
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயலட்சுமி டி சில்வாவிற்கு எதிரான வழக்கு, நேற்று புதன்கிழமை, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கானது, கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, வழக்கில் சந்தேகநபரான நீதிபதியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் வழக்குக் கோவை சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வழக்குத் தொடுநரான பெரியநீலாவணைப் பொலிஸார் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.
இவ் வழக்கானது, மீண்டும் எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதியன்று, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் அழைக்கப்பட திகதியிடப்பட்டுள்ளது.
