பொலிஸார் வெளியிட்ட தவறான அறிக்கை : உயிரிழந்தவர் இளைஞன் அல்ல சிறுவன் என உறுதி!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம்-அல்லைப்பிட்டி பகுதியில், பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு, 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில், பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு, 19 வயது என பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த சிறுவன் 2008.11.09 அன்றே பிறந்திருக்கிறார், அந்தவகையில் அவரது வயது 17+, இந்த வருடம் 11ஆம் மாதம் 09ஆம் திகதி வந்தால் தான் அவரது வயது 18 ஆகும்.

ஆகவே பொலிஸாரின் கூற்றுப்படி அவர் இளைஞன் அல்ல, அவர் சிறுவன் என்பது உறுதியாகியுள்ளது.

குறித்த சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து, சந்தேகத்துக்கிடமான முறையில் வாள், கயிறு மற்றும் மாட்டு சாணம் என்பன மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.