விலை திருத்தத்திற்கு பிறகு லாஃப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா, சாமிமலை மற்றும் நல்லதன்னி பகுதிகளில் உள்ள நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் லாஃப் எரிவாயு கிடைக்காததால் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
புதிய விலை திருத்தத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 02 வாரங்களாக தங்கள் வியாபார நிலையங்களுக்கு லாஃப் எரிவாயு விநியோகிக்கப்படவில்லை என வியாபாரிகள் மற்றும் லாஃப் சமையல் எரிவாயு விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக லாஃப் சமையல் எரிவாயுவை பாவிக்கும் தாங்கள், வேறு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாமல் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் லாஃப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாவனையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
