யாழில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் தொடர்பில் தெரிய வந்த தகவல்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் ஒருவர் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அங்கு வந்த நபர் வட்டிக்கு பணத்தை வழங்குகின்ற ஒருவரது பெயரை விசாரித்துள்ளார். பின்னர் சந்தையில் பச்சை மிளகாயை வாங்கிக்கொண்டு திரும்பிச் சென்றிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் அவரை கண்டுபிடித்தனர்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கொக்குவில் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர் வைத்திருந்தது போலி துப்பாக்கி என்றும் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்தி
