அரசாங்கத்தின் அதிரடி வர்த்தமானி
கொக்கோ, மிளகு மற்றும் ஏலக்காய் செய்கையாளர்களுக்கு ஆயிரத்து 920 ரூபாய் 58 சதம் நாளாந்த கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி, தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே. வடயலித்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்திற்கான வாழ்க்கை செலவு தொடர்பில் கவனத்திற் கொள்ளப்பட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் பயிர்ச்செய்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் பயிர்ச்செய்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக ஒரு ஹெக்டேயருக்கு 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
