டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று செவ்வாய்க்கிழமை சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 76 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 29 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 417 ரூபாய் 26 சதம், விற்பனை பெறுமதி 430 ரூபாய் 14 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய் 86 சதம், விற்பனை பெறுமதி 374 ரூபாய் 53 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
