மட்டு.முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட, முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தில், “அறிவுக்கான புதிய பாதை திறக்கப்படுகிறது” என்ற தொனிப்பொருளில், தரம் 1 தொடக்கம் 5 வரையிள்ள வகுப்பு மாணவர்களை மீண்டும் பாடசாலைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

கடந்த 38 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பாடசாலை கட்டிடம், 2025 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் மீள ஒப்படைக்கப்பட்டிருந்தது.

பின்பு பாடசாலை வளாகம், மிதிவெடி அகற்றும் செயற்பாடுகள் நிறைவு பெற்று, மீளவும் பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் இன்று இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் எம்.தவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன், அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ், வலயக்கல்விபணிப்பாளர் ரி.அனந்த ரூபன், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பு செயலாளர் க.திலிப் குமார் உட்பட கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.