புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 5 டன் பேரீச்சம்பழங்கள் நன்கொடை

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள, புனித ரமழான் பண்டிகைக்கான நோன்பு காலத்தை முன்னிட்டு குவைத் அரசு 25 டன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள குவைத் தூதரகம், புனித ரமழான் திட்டத்தின் கீழ், 16 முஸ்லிம் அமைப்புகளுக்கு குறித்த பேரீச்சம்பழங்களை விநியோகித்துள்ளது.

அதன்படி, குவைத் மற்றும் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 16 முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் ஊடாக பேரீச்சம்பழங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

குவைத் நன்கொடையாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து பேரீச்சம்பழங்களை வழங்கியுள்ளனர்