தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
