இலங்கைக்கு இலவங்கப்பட்டையினால் கோடிகளில் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 8 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக, இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்குத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனக லிந்தர தெரிவித்தார்.

இவற்றில், இலவங்கப்பட்டை சுருள்களே அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 251 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏனைய வருமானம் இலவங்கப்பட்டை பட்டை, இலைகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் மூலம் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர், இலங்கை சுமார் 70 நாடுகளுக்கு மாத்திரமே ஏற்றுமதி செய்திருந்த போதிலும், 2025 ஆம் ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளதாக ஜனக லிந்தர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இலவங்கப்பட்டை உலகில் ‘சிலோன் சினமன்’என்ற பெயரில் மிகவும் பிரபலமடைந்துள்ளதாகவும் அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனக லிந்தர தெரிவித்துள்ளார்.