பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு!
10ஆவது ஐசிசி (ICC) ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
குறித்த போட்டியில் நாணயசுழற்ச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 19.5 ஓவர்கள் நிறையில் சகல விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது .
நெதர்லாந்து அணி சார்பாக ஸ்கொட் எட்வர்ட்ஸ் (Scott Edwards) 29 பந்துகளுக்கு 37 ஓட்டங்களையும், பாஸ் டி லீட் ( Bas de Leede ) 25 பந்துகளுக்கு 30 ஓட்டங்களையும் மற்றும் மைக்கேல் லெவிட் (Michael Levitt )15 பந்துகளுக்கு 247 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதன்படி, பாகிஸ்தான் அணிக்கு 148 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
