
பொரலஸ்கமுவவில் ஹஷீஸுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
பொரலஸ்கமுவ – நிர்மல மாவத்தை பகுதியில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் காவல்துறை மேற்கொண்ட விசேட சோதனையின் போது, பாரிய அளவிலான ஹஷீஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய பெண் ஒருவர் எனவும் அவரிடமிருந்து சுமார் 17 கிலோகிராம் எடையுள்ள ஹஷீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் குறித்த போதைப்பொருட்களை விற்பனைக்காக அல்லது விநியோகிப்பதற்காக வைத்திருந்தாரா என்பது குறித்து காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
