GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்!
GovPay செயலி ஊடாக போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தும் சாரதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுமார் 46,635 சாரதிகள் GovPay செயலி மூலம் தங்களது போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டில் ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை மாத்திரம் 11,715 சாரதிகள் இந்த செயலியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த கொடுப்பனவு முறையில், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவினாலேயே (Expressway Traffic Division) அதிகளவிலான அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்
டிஜிட்டல் முறைமையிலான இத்தகைய கொடுப்பனவுகள் சாரதிகளுக்கு நேர விரயத்தைக் குறைப்பதுடன், அபராதங்களைச் செலுத்தும் நடைமுறையை மேலும் எளிதாக்கியுள்ளன.
