மரக்கறிகளின் விலைகளில் அதிரடி மாற்றம்

விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் நேற்றைய விலைப்பட்டியலுக்கு அமைய, நுவரெலியாவில் கோவா ஒரு கிலோகிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வவுனியாவில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரட் ஒரு கிலோகிராம், நுவரெலியாவில் 340 ரூபாய்க்கும், வுனியாவில் 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதுடன், பீட்ரூட் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 280 ரூபாய்க்கும் வவுனியாவில் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அண்மையில் அதிக கேள்வி நிலவிய, கறிமிளகாய் ஒரு கிலோகிராம் வவுனியாவில் 850 ரூபாய் விற்பனை செய்யப்பட்டதுடன், நுவரெலியாவில் 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து குடை மிளகாய் வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், நுவரெலியாவில் இன்று சிவப்பு குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 4,100 ரூபாய்க்கும், மஞ்சள் குடை மிளகாய் ஒரு கிலோகிராம் 4,100ற்கும், பச்சை குடை மிளகாய் ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை வவுனியாவில் குடை மிளகாய் ஒரு கிலோகிராம் 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோகிராம் லீக்ஸ் நுவரெலியாவில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், வவுனியாவில் 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு வவுனியாவில் 375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில் 370 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.