இலங்கை ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

நேற்று திங்கட்கிழமை ஒப்பிடுகையில், ​​இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 37 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி 429 ரூபாய் 29 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 75 சதம், விற்பனை பெறுமதி 371 ரூபாய் 45 சதம்.

இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.