இன்றைய நாளில் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலையில் இரு தடவைகள் அதிரடி மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 5,000 ரூபாவால் மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 385,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,275 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,737 அமெரிக்க டொலர்களைக் கடந்து உச்சத்தைத் தொட்டுள்ளமையே உள்ளூர் சந்தையில் இந்த விலை உயர்விற்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.