இந்திய பொருட்களுக்கான வரியை குறைத்த டொனால்ட் ட்ரம்ப்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிற்குத் தான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும்.

ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்தியா தனது வர்த்தகத் தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்றும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுத்ததற்காக டெல்லி மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25 சதவீத வரி அபராதம் நீக்கப்படும்.

சுமார் இருபது ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மைல்கல் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்த ஒரு வாரத்திற்குள் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டதில் தாம் “மகிழ்ச்சி” அடைவதாக இந்திய பிரதமர் மோடியும் எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Narendra Modi
Narendra Modi