யாழில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்-

யாழில் கிருமித் தொற்றினால் சிறுவன் ஒருவன் நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளான். கோண்டாவில் – இருபாலை வீதியைச் சேர்ந்த மகிந்தன் லர்மிகன் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

மேலும், இவருக்கு நேற்றையதினம் வயிற்றோட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 5.00 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

வயிற்றோட்டம் ஏற்பட்டு, உடலில் நீர்ச்சத்து குறைந்து கிருமித்தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.