இராணுவ வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு : வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில், இன்று திங்கட்கிழமை, இராணுவ வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர், வீதியை கடக்க முயன்றபோது, அவர் மீது இராணுவ வாகனம் மோதி, இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
