மட்டக்களப்பு புனாணையில் மோட்டார் சைக்கில் – மீன்லொறி மோதி விபத்து
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு கொழும்பு வீதியில் புனாணை 126 மையல் கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்
ரிதிதென்னை யைச்சேர்ந்தவரே இஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் புனாணை பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசர் மேற்கொண்டு வருகின்றனர்.
