வீதிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டைப் புதுப்பிக்க நடவடிக்கை
வீதிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் தற்போது, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, அந்த சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்கு அல்லது வேகத்தை அதிகரிக்க வேண்டிய வீதிகளை அடையாளம் காணவும், அதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வகையில், தரவுத்தளத்திற்கான புதுப்பிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
