திருகோணமலை – இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயத்தின் பாடசாலை தினம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை , இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயத்தின் 49 வது பாடசாலை தினம் வித்தியாலயத்தின் அதிபர் சு. யுவராஜா தலைமையில் நேற்று சனிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (முகாமைத்துவம்) ந. பரமேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
விழாவில் பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள் பாடசாலை சமூகத்தால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
