1240 மில்லி கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

-மஸ்கெலியா நிருபர்-

மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் உள்ள மஸ்கெலியா பொலிஸ் சார் மேற் கொள்ளும் வீதி தடை சோதனை சாவடியில் வைத்து கொடக்காவல பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய நபரிடம் இருந்து 1240 மில்லி கிராம் கஞ்சா நேற்று சனிக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கஞ்சா கொண்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று ஆஜர் படுத்தப்பட்ட போது 7500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.