எரிபொருள் விலையில் இன்றிரவு திருத்தம்
பெப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
அதன்படி, தொடர்புடைய எரிபொருள் விலை ஒழுங்குமுறைக்குழுவும் இன்று கூடவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்திற்கான கடைசி எரிபொருள் விலை திருத்தத்தில், ஒரு லிட்டர் லங்கா ஒயிட் டீசல் மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது,
மேலும் 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் லிட்டரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
