செங்கலடியில் கௌரவிப்பு நிகழ்வு
-செங்கலடி நிருபர்-
மட்டக்களப்பு ஐயன்கேணி வின்னிங் ஸ்டார் பாலர் பாடசாலை மற்றும் பாரதி சன சமூக நிலையம் இணைந்து நடாத்திய கௌரவிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது அதிதிகள் வரவேற்பு, இறைவணக்கம், வரவேற்புரை, ஆசியுரை, தலைமயுரை, பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், கௌரவிப்பு நிகழ்வு, அதிதிகள் உரை மற்றும் தொடர்ந்து நிகழ்வுகளில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சர்வானந்தன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன், சி.நாகேந்திரன், செ.நிலாந்தன், த.டிலக்சினி, மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




