
மலையக உள்ளூராட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்தியாவில் விசேட பயிற்சி
இலங்கை மலையகப் பிராந்தியத்தைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் (NIRDPR) 10 நாட்கள் நீடித்த விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
ஜனவரி 19 முதல் 29, 2026 வரை இப்பயிற்சி நடைபெற்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (CWC) கோரிக்கைக்கு இணங்க, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இது முன்னெடுக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள் திட்டமிடல், வரவுசெலவுத் திட்டம், மகளிர் வலுவூட்டல், சுகாதாரம், கல்வி, சூழல் சுற்றுலா மற்றும் மாற்று வாழ்வாதாரங்கள் குறித்து விரிவான பயிற்சிகளைப் பெற்றனர்.
அங்கன்வாடி மையங்கள், கூட்டுறவு வங்கிகள், மகளிர் பால் பண்ணைகள் மற்றும் நீலகிரியில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கும் இவர்கள் நேரடியாகச் சென்று அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பிற்கு இணங்க, இலங்கைத் தொழில் வல்லுநர்களுக்காக ஆண்டுதோறும் 700 மேலதிக பயிற்சி இடங்கள் தற்போது வழங்கப்படுகின்றன.
இது வழமையாக வழங்கப்படும் ITEC பயிற்சிகளுக்கு மேலதிகமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது
